பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Dec 2016

வரதராசன் பாக்கள்






பாரதியின் நினைவில். . .!
(காவடிச் சிந்து)

சுட்டும்வி ழிச்சுட ரில் - தீயாய்ச்
    சொற்களை நீவிதைத் தாய் - அந்தச்

        சூட்டை
ப்பொ றுக்காமல் 
            நாட்டைவிட் டோடினர்
       சூழ்ச்சியில் வாழ்ந்தவ ராம் - வெள்ளைச்
       சூதுப றங்கிக. ளாம்.

பட்டதைச் சொன்னவ னே - பல
    பாடுகள் பட்டவ னே - தமிழ்
       பாட்டுக ளில்கொடு 
        வேட்டுவைத் தாயிந்தப்
         பாரினில் மேன்மைபெற் றாய் - கவி
         பாரதி என்றுயர்ந் தாய்!

தீயவர் கள்நிறைந் த - தமிழ்
     தேயத்தி லேபிறந்து - நீயும்
     தீக்கன லாகவே
      பாக்க ளுமிழ்ந்திடு
       செந்தமிழ் பாரதி யே - மீண்டும்
       தேவையு ணர்குவை யே! 

ஆயநி லையறி வாய் - எங்கள்
     ஆண்டவ னேவரு வாய் - மான
       ஆடையற் றேவாழும்
       பீடைக ளாமெம்மை
        ஆட்கொள வேவரு வாய் - கவி
         ஆதவ னேவரு வாய்!
****    ***-    ****    ****    *****    ****   
பாரதி புகழ் வாழ்க
 *******************
                             (கும்மி) 
 கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
    கூடாரத் தைவிட்டு ஓடிட வே 
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
   சொந்தக்கா ரக்கவி பாரதி யே!

வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
     வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே 
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
    தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்! 

காக்கை குருவியைக் காதலித் தாய் - வீட்டைக்
    காத்திடும் நாயினைக் காதலித் தாய்
பாக்கள னைத்தையும் காதலித் தாய் - வாழ்வைப்
    பாதியில்ஏ னய்யா நீமுடித்தாய்?

இற்றைத்த மிழ்நாட்டில் நீயிருந் தால் - ஐயோ
    ஏங்கித்து டித்தேயி றந்திருப் பாய்
உற்றநி லைவரும் என்றறிந் தோநீயும்
    உன்னுயிர் விட்டுப்ப றந்தனை யோ?

இந்தநி லைமாறும் என்றுநம் பி - நாங்கள்
    ஏங்கிக்க ழிக்கிறோம் வாழ்க்கையி னை
மந்தைக ளாயினும் உன்னையெண் ணி - இன்று
    வாழ்த்துகி றோம்நீயும் ஏற்றிடு வாய்!

No comments: